Wednesday, November 24, 2010

உருவம் மாற்றும் பிம்பம்


சமீபமாக என்னை தொடர்ந்து வந்த 
ஒரு வெற்று பிம்பத்திற்கு 
உருவமிட விழைந்து 

பல உருவங்கள் புனைகையில் 
இடும் உருவத்தை எல்லாம் 
விழுங்கிக்கொண்டு வெற்று 
பிம்பமாகவே எட்டிப்பார்த்தது 

உறங்கும் போதும் மற்ற நேரத்திலும் 
பதுங்கி தனிமையில் சிக்குண்டால் 
என்னை விழுங்க முயல்கிறது 
என் கற்பனையை உண்டு வளர்ந்த 
அது நாளடைவில் என் உருவை 
மாற்ற முயல்கிறது 

இதனால் பெரும்பாலும் தனிமையை 
தவிர்த்து வந்த நான் 
தனித்திருக்க நேருகையில் அதன் 
செயப்படுபொருளாய் ஆகிறேன் 

விரைவில் என் உருவம் 
மாறிவிடும் அபாயம் உள்ளதால் 
இக்குறிப்புகளை அவசரமாய் 
இங்கு பதிகிறேன் .

9 comments:

  1. உண்மையிலேயே மிக அருமையாக உள்ளது தமிழ்.
    //தனித்திருக்க நேருகையில் அதன்
    செயப்படுபொருளாய் ஆகிறேன் //
    அடடா அருமைங்க..!!

    ReplyDelete
  2. //விரைவில் என் உருவம்
    மாறிவிடும் அபாயம் உள்ளதால்
    இக்குறிப்புகளை அவசரமாய்
    இங்கு பதிகிறேன் .//

    அவசரமாய் இங்கு பதிந்தீங்க சரி. அதே மாதிரி அவசரமாக தமிழ்மணம், இன்ட்லி போன்ற திரட்டிகளிலிலும் இணையுங்கள்..!!
    ஹி..ஹி.. சரியா...!!
    பகிர்வுக்கு நன்றி நண்பரே..!

    ReplyDelete
  3. @பிரவின்குமார்:மேலான கருத்துக்கு நன்றி பிரவின்.

    ReplyDelete
  4. @பிரவின்:ஹ்ம்ம் சரி பிரவின்.இணைத்திடலாம்.நன்றி :)

    ReplyDelete
  5. கவிதை நன்றாக இருக்கிறது...ஆனால் படம் தான் பயமுறுத்துகிறது.......

    ReplyDelete
  6. அருமை நண்பா
    யோசித்தலில் நீ தனித்து இருக்கிறாய் !!!!

    ReplyDelete
  7. என்னாப்பா படம் இப்படி பயமுறுத்துது? பாட்டெல்லாம் நல்லாத்தான் இருக்கு, இன்னும் நல்லா எழுது

    ReplyDelete
  8. நன்றி நித்திலம்-சிப்பிக்குள் முத்து,சிட்டுக்குருவி.பயம் லாம் இல்ல.இந்த பதிவில் இருக்கும் எதார்த்தம் தான்

    ReplyDelete