நாம் பிரிந்த பல நாட்களுக்கு பிறகு
வான்திரையில் முகிலெழுதுக்களால்
நீ எழுதிய என் பெயர்
கவனிக்காத சிறு பொழுதில்
சுவடின்றி மறைவது போல
வளியோடு கரைந்து விட்டு
வலியோடு உறைந்திருந்த
ஒரு முன்னிரவு பொழுதில்
கடலடைந்த நீரின் மறுதலையாய்
நீ என்னை தொடர்பு கொண்ட போதும்
உனக்கு தேவையானதை
என்னிடம் கேட்டு
தெரிந்து கொண்ட போதும்
நன்றி என கூறி
தொடர்பை துண்டித்த போதும்
என் குரலில் ஏற்பட்ட
சிறு நடுக்கத்தை
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை
ம்ம் நன்றாக இருக்கிறது.....
ReplyDelete@நித்திலம்-சிப்பிக்குள் முத்து : வருகைக்கு நன்றி :)
ReplyDeleteகலக்கல்.. வாழ்த்துக்கள்
ReplyDeletearumai thamil
ReplyDeleteஎன் குரலில் ஏற்பட்ட
ReplyDeleteசிறு நடுக்கத்தை
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை
muditha vitham superb
@அரசன்: வருகைக்கு நன்றி அரசன்.
ReplyDelete@sakthi: ஹ்ம்ம் :) நன்றி சக்தி.
அருமையான கவிதை தமிழ்
ReplyDelete//என் குரலில் ஏற்பட்ட
ReplyDeleteசிறு நடுக்கத்தை
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை//
அழகு..!! மிகவும் ரசித்தேன்..!!
@சிட்டுக்குருவி, @Paul: கருத்துக்கு மிக்க நன்றி :)
ReplyDeleteஅருமை தமிழ்
ReplyDeleteநன்றி கல்பனா...
ReplyDelete