Sunday, October 31, 2010

சிரிப்பு..




மூளை முன் மொழிய
முகம் முடிவெடுக்க
உதடுகள் ஒத்துக் கொண்டு
வாய்வழி அனுப்பும்
அற்புத மலர்

சிரிப்பு...
சிநேகத்தின் வரவு..

சிரிப்பு...
சிந்தனையின் முதிர்ச்சி..

சிரிப்பு...
அன்பின் வரவேற்புரை..

சிரிப்பு...
அவசர உலகின்
இடைக்கால நிவாரணி..

சிரிப்பு...
நோய்களை விரட்டும்
இயற்க்கை மருத்துவம்..

சிரிப்பதில் சிக்கனமா?

சிரித்துச் சிரித்து
உங்களுக்கு நீங்களே
மருத்துவம் பாருங்கள்..

இல்லை என்றால்
என் ஆட்சியில் வரும்
இப்படி ஒரு சட்டம்
"சிரிக்கத் தெரியாதவனுக்கு சிறை"

Saturday, October 30, 2010

முதல் கவிதை...


அம்மாவை பற்றி கவிதையா
நிச்சயமாக முடியாது என்னால்
காதலியை பற்றி எழுத ஒரு காகிதமும்
சில பொய்களும் போதும்...!

அம்மா உன்னை பற்றி
எழுத உலகத்தில் உள்ள
அனைத்து காகிதங்களும் போதாது..!

என்னை பொறுத்தவரை
கடவுளை நான் நம்ப காரணமே
எதை எதையோ படைத்த அவன்
அம்மாவையும் படைததற்க்காகதான்..!


நான் சொன்ன
முதல் வார்த்தை...

எல்லோரும் சொல்லும்
முதல் வார்த்தை...

நாங்கள் அன்றே
சொன்ன முதல் கவிதை...

அம்மா..!!

Friday, October 29, 2010

சிதைத்து கலைத்தவள்

நான் கவிக்காய் யோசித்து
வைத்த வார்த்தைகளை 
கலைக்கும் பொருட்டு 
என்னுள் நுழைய முயன்ற
அவள் முடியாமல் போகவே 
என் எழுதுகோல் வழி நுழைந்து 
நான் எழுதும் வரை காத்திருந்து
முடிக்கும் தருவாயில் 
என் வார்த்தைகளை
கலைத்தது மட்டுமின்றி 
வினைமுற்றுகளை
எச்சங்களாகவும்  திரித்து விட்டாள்.
வாக்கியங்கள் யாவும்
எச்சங்களாய் தொக்கி நின்றன .
துரத்தி வந்த நாய் கடித்ததும்
திரும்பிச் சென்றது போல 
வந்த வேலை முடிந்ததென
அமைதியாய் சென்றாள். 
எழுதியதை மறந்தவனும்
திருப்பி எழுத இயலாதவனுமாய் 
அடித்து ஓய்ந்த புயலில்
பொறுக்கிய நாவல் பழமாய் 
குறைந்த பட்ச சேதாரத்துடன் 
இருந்த ஒரு வாக்கியத்தை 
பொறுக்கி தலைப்பாய் போட்டேன்...

Thursday, October 28, 2010

அனைவருக்கும் வணக்கம்!

பொழுதுபோக்கிற்க்காகவும் விளையாட்டாகவும் பஸ்ஸில் மொக்கை போட்டுக்கொண்டிருந்த நாம் பல நல்ல கருத்துக்களையும் கவிதை, கதை, அறிவியல், அனுபவங்கள், தொழில்நுட்பம் மற்றும் பல செய்திகளை இணையத்தின் மூலம் பகிர்ந்துகொள்ள இந்த பஞ்சவர்ணசோலை வலைப்பக்கத்தினை உருவாக்கியிருக்கிறோம்.


இந்த பஞ்சவர்ணசோலையில் நமது நண்பர்கள் தங்களுடைய சிறந்த படைப்புகளை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.