Sunday, October 31, 2010

சிரிப்பு..




மூளை முன் மொழிய
முகம் முடிவெடுக்க
உதடுகள் ஒத்துக் கொண்டு
வாய்வழி அனுப்பும்
அற்புத மலர்

சிரிப்பு...
சிநேகத்தின் வரவு..

சிரிப்பு...
சிந்தனையின் முதிர்ச்சி..

சிரிப்பு...
அன்பின் வரவேற்புரை..

சிரிப்பு...
அவசர உலகின்
இடைக்கால நிவாரணி..

சிரிப்பு...
நோய்களை விரட்டும்
இயற்க்கை மருத்துவம்..

சிரிப்பதில் சிக்கனமா?

சிரித்துச் சிரித்து
உங்களுக்கு நீங்களே
மருத்துவம் பாருங்கள்..

இல்லை என்றால்
என் ஆட்சியில் வரும்
இப்படி ஒரு சட்டம்
"சிரிக்கத் தெரியாதவனுக்கு சிறை"

10 comments:

  1. ஹ்ம்ம் . நல்லது . சிரிச்சுட்டா போச்சு . :))

    ReplyDelete
  2. ஊரே சிரிப்பா சிரிக்குது !! உங்க கவிதைய பார்த்துங்க.

    ReplyDelete
  3. nice very good சிரிப்பு...

    ReplyDelete
  4. ஹ...ஹா...ஹா... மிக மிக அருமையாக உளளது.

    ReplyDelete
  5. அருமையான கவிதை :)

    ReplyDelete
  6. லைக் பண்றதுன்னு முடிவு பண்ணிட்டா எல்லாத்தையும் லைக் பண்ணுவன் அவன் தான் யுவா

    ReplyDelete
  7. சந்தோஷத்தை நாடி போவதை விட..சந்தோஷத்தை பகிர்வதே பெரிய சந்தோஷம்...

    ReplyDelete