Tuesday, November 16, 2010

நலம் காப்போம்!!

அனைவருக்கும் வணக்கம்,

எல்லாரும் நல்லா இருக்கீங்களா? நம்முடைய தமிழ்க்கலாச்சாரத்தோட முதல் பார்வை விசாரிப்பு இப்படித்தான் இருக்கும். முதல்ல நாம எல்லாரும் விரும்பரது நம்முடைய சுற்றத்தாரும் நட்புகளும் நலமோட இருக்கனும்னு தான். பல பேர் முகம் மலர நல்லாயிருக்கேன் எனக்கென்ன குறை சந்தோசமான குடும்பம், பிள்ளைகள், தொல்லைகள் இல்லாத வேலை என மகிழ்ச்சியான பதிலைக்கூறும் போது நமக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.


நம்முடைய நெருங்கிய சிலபேரிடம் கேட்கும் போது “ம்ம் எதோ இருக்கேன்” என்று எதோ ஒரு வித சோகத்தோடு கூறுவார்கள். இப்படி பேசுபவர்களிடம் அவர்களுடைய பிரச்சனைகளை கேட்டு தெரிந்து கொண்டு அந்த பிரச்சனை, கவலைக்குரிய விடயத்தை நாம் அவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். கவலைகளை வளரவிட்டால் அதுவே சிறிது சிறிதாக நம்மை கொல்ல ஆரம்பித்துவிடும். கவலைகள், பிரச்சனைகளின் தொடக்கத்திலேயே நமது நம்பிக்கைக்குரியவர்களிடம் கலந்தாலோசித்து அதனை முளையிலையே கிள்ளி எறிந்துவிடவேண்டும்.

அடுத்து சில நண்பர்கள் திடீரென ஆபத்துகள், விபத்துகளில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடும் நிலையில் இருப்பார்கள். அவர்களை பார்க்கும் போது நமக்கு மிகவும் கவலையாகவும் பதட்டமாகவும் இருக்கும். நமது சொந்தங்கள் நட்புகள் சில நேரங்களில் அவசர உதவிகளை கோரும்போது நாம் மிகவும் பதட்டமாகித்தான் விடுகிறோம். அத்தகைய நேரங்களில் முக்கிய ஆம்புலன்ஸ், மருத்துவமனை, ரத்தவங்கி எண்களை சேமித்து வைத்துக்கொள்ளவும். அவசரமான உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையில் உதவிகளை தேடிக்கொண்டிருப்பது நேரம் விரயம் ஆவது மட்டுமே.

நண்பர்களே அனைவரும் நலமாக வாழ வேண்டுமென்பதே நமது எண்ணம். எல்லாருக்கும் உதவி செய்யுங்கள், மற்றவர்களையும் உதவி செய்ய அறிவுறுத்துங்கள்!!

3 comments:

  1. நலமாக இருக்கிறேன். நீங்களும் நலமாக இருப்பீங்கனு நம்புறேன்.
    //எல்லாருக்கும் உதவி செய்யுங்கள், மற்றவர்களையும் உதவி செய்ய அறிவுறுத்துங்கள்!! //
    நிச்சயம் கடைபிடிக்க வேண்டிய வரிகள். பகிர்வுக்கு நன்றி..!

    ReplyDelete
  2. ஹ்ம்ம் நலம் :) .. பின்பற்ற வேண்டிய வரிகள்..

    ReplyDelete
  3. நல்ல அறிவுரை.
    நன்றி.

    ReplyDelete