என் உணர்வுகளை உயிர்ப்பித்ததோடு
அல்லாமல் குனிந்த படி அமர்ந்திருந்த
என் தவத்தையும் கலைத்தது .
யாருமற்ற வெளியில்
எல்லைக்கல் போல் நிற்பதற்கு
காரணம் ஏதும் அகப்படாமல்
சற்றே தெளிந்தவனாய்
நடக்க முற்படுகையில்
விழுந்த துளி கண்ணீர்த்துளி
என தெளிந்ததும் வரையறுக்கபடாத
ஒரு முறுவலை உதிர்த்தேன் .
எப்படி இங்கு வந்தேன்
அல்லது வந்ததாய் உணர்ந்தேன்
என்று சிந்தித்து ஊர்கையில்
பார்வை விளிம்பில் பட்டது ஆழ்கடல்.
சுற்றும் முற்றும்
காதல் ஜோடிகளோ சுண்டல் காரனோ
இல்லாததை வைத்து
இது பொது கடற்கரை அல்ல
என முடிவுக்கு வந்தவனாய்
அலைகள் அருகே
அமர எண்ணி நடக்கையில்
நெற்றியில் முட்டியது
தாழிடப்பட்ட அறைகதவு .
இது என்னுடைய அறையா
எத்தனை நாள் இங்கு கிடக்கிறோம்
என சிந்திக்க விருப்பமின்றி
திரும்பி நடந்தேன்.
"இனிமேலாவது நிம்மதியாய் இரு "
என்ற அவள் கடைசி வசனம்
மட்டும் நினைவுக்கு வர ,
எவ்வித சலனமுமின்றி
நாற்காலியை நோக்கி நகர்கிறேன்.
நல்லாயிருக்கு..!
ReplyDeleteகவிதை அருமை தமிழ்
ReplyDelete//யாருமற்ற வெளியில்
ReplyDeleteஎல்லைக்கல் போல் நிற்பதற்கு
காரணம் ஏதும் அகப்படாமல்
சற்றே தெளிந்தவனாய்
நடக்க முற்படுகையில்
விழுந்த துளி கண்ணீர்த்துளி
என தெளிந்ததும் வரையறுக்கபடாத
ஒரு முறுவலை உதிர்த்தேன் .//
இந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு..கவிதை எதோ ஒரு விதத்தில் ஈர்க்கிறது...யாரது இங்கே தமிழ்? வாணி சொல்லவும்
பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி .
ReplyDelete@தமிழரசி: கருத்துக்கு நன்றி தமிழரசி :)
தமிழ் செல்வன் இந்த ப்ளாக் குழும நண்பர் அக்கா :))
ReplyDeleteபின்னூட்டத்திற்கு நன்றி
தமிழ் நன்றாக இருக்கிறது - வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துகள் நண்பரே
ReplyDeleteநல்ல ஆக்கம்
பாராட்டுகள்
போளூர் தயாநிதி
கவியா இது !!!
ReplyDeleteகவியே தானா !!!!
//யாருமற்ற வெளியில்
ReplyDeleteஎல்லைக்கல் போல் நிற்பதற்கு
காரணம் ஏதும் அகப்படாமல்
சற்றே தெளிந்தவனாய்
நடக்க முற்படுகையில்
விழுந்த துளி கண்ணீர்த்துளி
என தெளிந்ததும் வரையறுக்கபடாத
ஒரு முறுவலை உதிர்த்தேன்//
அருமை தமிழ் ....
வாசிக்கும் போது நானே அதில் உவமை ஆக்க படுவதை உணர்தேன்......
வாழ்த்துக்கள் .....
பின்னூட்டத்திற்கு நன்றி தோழர்களே
ReplyDeleteபோளூர்தயாநிதி,
Muthumani,
துரை.
@kalps:கருத்துக்கு நன்றி தோழி
Kavithai arumai nanbarae..
ReplyDeleteநன்றி முத்து
ReplyDelete