Thursday, November 11, 2010

கவிதையாவேன்..



இருளில்
நட்சத்திரங்களின் ஒளியில்
கருநீலமென ஒளிரும்
மலையின் நிசப்தங்கள்
பேசுகின்ற வார்த்தைகள்..
நிலவின்
நீள் குளிர்ச்சியில்
ஒளி பெய்து போகும்
சப்தங்கள்..
குழாயிலிருந்து வீழும் நீர்
கை விழுகையில் பேசுவதையும்
உள்ளங்கை வழி வீழ்கையில்
குரல் தொனி மாற்றிக்
கொஞ்சிடும் கொஞ்சல்கள்..
எரியும் சுடர்
தொடாத வரை சுட்டு விடாத
வெப்பத்தின் இருப்பு
உச்சரிக்கும் மந்திரங்கள்..
அர்த்தமாகிவிடும் பொழுதில்
புரிதலுக்குட்பட்ட
அழகிய கவிதையாவேன்..

7 comments:

  1. கவிதை அருமையாக உள்ளது நண்பரே

    ReplyDelete
  2. நல்ல வர்ணிப்பு திலக் . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Vani Sarangam - எல்லாரும் கமெண்ட் போட்டீங்களா ஃப்ரண்ட்ஸ்???
    பஸ்ஸுல பார்த்தேன்.அதுனால வந்து கமெண்ட் போட்டாச்சு.

    ReplyDelete
  4. அருமை !!
    தமிழ் .. யாரு திலக் ???
    நல்ல எழுதுறாங்க
    வாழ்துக்கள் திலக் சார்

    ReplyDelete
  5. @kalps:திலக் இந்த குழும நண்பர். நன்றாக எழுதுவார்

    ReplyDelete
  6. நல்லாயிருக்குங்க நண்பரே..! கவிதை.

    ReplyDelete
  7. எரியும் சுடர்
    தொடாத வரை சுட்டு விடாத
    வெப்பத்தின் இருப்பு
    உச்சரிக்கும் மந்திரங்கள்..

    nice lines

    ReplyDelete