அனைவருக்கும் என் இனிய அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த இனிய தீபாவளி திருநாளில் புத்தாடை, பட்டாசுகள், இனிப்புகள், சிறப்பு நிகழ்ச்சிகள் சூழ்ந்த சொந்தங்கள் என மிக மகிழ்ச்சியாக கொண்டாடப்படும் தீபாவளி.
இந்த தீபாவளித்திருநாளில் இந்துக்கள் அனைவரும் நிறைந்த அமாவாசையில் சாமிக்கு விரதம் இருப்பார்கள். அதில் சில சம்பிரதாயங்களோட நமக்கு பிடித்த பலகாரங்களும் நிறைந்திருக்கும். இன்று நாம் அந்த பலகாரத்தை செய்து கடவுளையும் மற்றும் இனிப்புடன் நம் நண்பர்களையும் மகிழ்ச்சியூட்ட போகிறோம்.
வெல்ல எள் பனியாரம் (அதிரசம்)
இதற்கு தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கிலோ
வெல்லம் - 1 கிலோ
எண்ணெய் - 1 லிட்டர்
எள் - போதுமான அளவு
பச்சரிசியை அரைமணிநேரம் ஊறவைத்து பின்பு நிழலில் ஆற வைத்தபிறகு மாவாக்கி வைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் வாயகன்ற பாத்திரத்தை வைத்து வெல்லத்தை பொடித்து கொட்டி சிறிது நீர்விட்டு கரைக்கவும். வெல்லம் கரைந்து மிதமாக சூடேற்றி இளம்பாகு வரும் வரை காத்திருக்கவும். வெல்லம் கரைந்து இளம்பாகு பதம் வந்தவுடன் அதில் பச்சரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கெட்டியாகமல் கிளறிக்கொண்டே இருக்கவும். பின்பு அதில் எள்ளை போட்டு கிளறவும். இளம்பாகு, மாவும் நன்றாக பிசைந்து உருண்டையாக வரும் வரை கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.
பின்னர் கிளறிய மாவை சிறிது சிறிதாக உருண்டைகள் பிடித்து வட்டவடிவில் தட்டி நன்றாக காய்ச்சிய எண்ணெயில பொறித்து எடுத்து
எண்ணெய் ஒற்றி ஆற வைத்து பின் சாமிக்கு படைத்து நண்பர்கள், உறவினர்களுக்கு அளித்து சாப்பிடவும். இதே போல சர்க்கரை பாகு எடுத்தும் செய்யலாம்.
தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்கும்போது பாதுகாப்பாகவும் கொண்டாட அனைவருக்கும் வாழ்த்துகள்!!
ஹ்ம்ம் சூப்பர் . வீட்ல செய்ய சொல்லி பாப்போம் . என்ன சொல்றாங்கனு .
ReplyDeleteஅனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் :)
thangachi enaku sapida matum than theriyum
ReplyDeletesiymurai solli thantharuku mitka nanri :)
இனிய தீபஒளி நல்வாழ்த்துகள்..!!
ReplyDeleteஎனக்கு சமைக்க வராது..
ReplyDeleteசோ எனக்கு ஒரு பார்சல்..
இனிய தீபஒளி நல்வாழ்த்துகள்..!!
ReplyDeleteஇளம்பாகு பதம் எப்படி அறிவது, ஒவொரு முறையும் என்ன அம்மா இதை கரணம் காடுகிராகள், இதைபற்றி அடுத்த பதிவில் விளக்கமாக போடவும். மேலும் இங்கு கொஞ்சம் சுவைக்க சாம்பிள் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.