Friday, October 29, 2010

சிதைத்து கலைத்தவள்

நான் கவிக்காய் யோசித்து
வைத்த வார்த்தைகளை 
கலைக்கும் பொருட்டு 
என்னுள் நுழைய முயன்ற
அவள் முடியாமல் போகவே 
என் எழுதுகோல் வழி நுழைந்து 
நான் எழுதும் வரை காத்திருந்து
முடிக்கும் தருவாயில் 
என் வார்த்தைகளை
கலைத்தது மட்டுமின்றி 
வினைமுற்றுகளை
எச்சங்களாகவும்  திரித்து விட்டாள்.
வாக்கியங்கள் யாவும்
எச்சங்களாய் தொக்கி நின்றன .
துரத்தி வந்த நாய் கடித்ததும்
திரும்பிச் சென்றது போல 
வந்த வேலை முடிந்ததென
அமைதியாய் சென்றாள். 
எழுதியதை மறந்தவனும்
திருப்பி எழுத இயலாதவனுமாய் 
அடித்து ஓய்ந்த புயலில்
பொறுக்கிய நாவல் பழமாய் 
குறைந்த பட்ச சேதாரத்துடன் 
இருந்த ஒரு வாக்கியத்தை 
பொறுக்கி தலைப்பாய் போட்டேன்...

11 comments:

  1. அருமை தமிழ்செல்வன் :))

    ReplyDelete
  2. இதுல பொருள் குற்றம் இருக்கே!, உங்களுக்குள்ள நுழையாம, எப்படி உங்க பேனாக்குள்ள நுழைய முடியும்

    ReplyDelete
  3. நல்லாதானே இருக்கு..

    ReplyDelete
  4. காதலுக்கான சுவையோடு கவிதை...

    ReplyDelete
  5. அம்மா உனக்காக சாபமிடுவேன்

    மாக்கள் உன் பெயரை அழைத்து மகிழ்திருக்க
    மக்கள் எதனாலோ உன்னை மறந்தனர்

    ஆங்கில மொழி தந்துவிட்ட போதையினால்
    அரை மயக்கத்தில் அகப்பட்ட என் மக்களுக்கு சாபமிடுவேன்

    மக்களெல்லாம் மாக்களாக பிறக்க வேண்டும்
    மறவாமல் தமிழ் பெயரில் அம்மா என்று அழைக்க வேண்டும் !

    ReplyDelete
  6. அனைவருக்கும் நன்றி ..
    @டுபாக்கூர் பதிவர் : பெண்கள் நினைத்தால் எங்கு வேணாலும் நுழையலாம் . அது அன்பின் ஆழத்தை பொருத்தது

    ReplyDelete
  7. கவிதை அருமை தொடர்ந்து நிறைய எழுத வாழ்த்துகள்.,!!

    ReplyDelete
  8. @பிரவின்குமார்: நன்றி . முயற்சிக்கிறேன் :)
    @Kousalya: நன்றி

    ReplyDelete